உணவில் கரப்பான் பூச்சி ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை

ஹட்டன் நகர மையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பரிமாறப்பட்ட சோற்றில் செவ்வாய்க்கிழமை (21) கரப்பான் பூச்சி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உணவக உரிமையாளருக்கு எதிராக, இந்த மாதம் 31 ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் சௌந்தர் ராகவன் தெரிவித்தார்.

மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​தட்டில் இறந்த கரப்பான் பூச்சி இருப்பதாக உணவக ஊழியர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், வாடிக்கையாளர் அவசர அழைப்புப் பிரிவுக்கு (119) தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அதிகாரிகள் உணவகத்திற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அதன்படி, உணவகத்தை சுகாதாரமற்ற முறையில் பராமரித்தல் உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *