உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு
புஸ்ஸல்லாவ நயப்பனை மேற்பிரிவில் சிறுத்தையொன்று புதன்கிழமை (16) உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

நயப்பனை தோட்டத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்பட்ட நிலையில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக போடப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி சிறுத்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுத்தையின் உடல் கம்பளை வனஜிவராசி தினைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு புஸ்ஸலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.