எச்சரித்தால் தாக்குதல் : ஐவர் கைது
நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற இ.போ. சபைக்கு சொந்தமான பஸ்ஸின் நடத்துனரை நானுஓயா, கிளரண்டன் பகுதியில் வைத்து
சிலர் தாக்குதலுக்கு உட்படுத்தியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ் நிற்கும் முன்னர் பஸ்ஸிலிருந்து இறங்குமாறு நடத்துனர் பயணியை எச்சரித்ததையடுத்து, குறித்த பயணி இறங்க முற்பட்ட போது தவறி விழுந்ததால் சனிக்கிழமை (18) இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர் மற்றவர்களுக்கு தொலைபேசியில் அறிவித்ததையடுத்து, அவரின் நண்பர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும்
நடத்துனர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோதலில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இ. போ.ச சொந்தமான பஸ் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.