நுவரெலியாவில் வெள்ளம் : விவசாயிகள் கவலை
நுவரெலியாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் கந்தபளை பகுதியில் விவசாயம் செய்யும் தாழ் நிலங்களில் வெள்ள நீர் ஞாயிற்றுக்கிழமை (19) உட்புகுந்துள்ளதால் அறுவடைக்கு தயாரான மரக்கறி வகைகள் பாதிக்கும் நிலைக்குள்ளாகியுள்ளதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கிறனர்.

இப்பகுதியில் கால்வாய்கள் முறையாக புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்படாததன் காரணமாக மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்பட்டு விவசாய
நிலங்கள் பாதிக்கப்படுகிறது.

மேலும். தொடர்ச்சியாக பெய்யும் மழைக்காரணமாக நுவரெலியாவில் பிரதான வீதிகளை பயன்படுத்தும் வாகனச் சாரதிகள் பனி மூட்டம் மற்றும்
மழையுடனான காலநிலை நிலவும் போது தமது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு பயன்படுத்துவதன் மூலம் விபத்துகளை
தவிர்த்துக் கொள்ளலாம் என போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
