வத்தேகமயில் பஸ் விபத்து – 15 பேர் காயம்

கண்டி குடுகலை வழியாக பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் பஸ், வத்தேகம, அரலிய உயன பகுதிக்கு அருகில், வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் 15 பயணிகள் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வத்தேகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில், பஸ்ஸில் சுமார் 25 பயணிகள் இருந்ததாகவும் பஸ் சென்று கொண்டிருந்தபோது, திடீரென தனது இருக்கைக்கு அருகில் இருந்த கதவு திறந்ததால், சாரதி வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் கண்டி மாவட்ட மேலாளர் சனத் பிரசன்ன தெரிவித்தார்.
