கொழுந்து பறிக்கும் போட்டியில் அந்தனி இரேஷா ராஜலட்சுமி முதலிடம்

க.கிஷாந்தன்

மூன்றாவது முறையாக ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் ஏற்பாட்டின் கீழ் 60 தோட்டங்களில் பணியாற்றும் 42 தொழிலாளர்களுக்கு இடையிலான சிறந்த தரமான பச்சை தேயிலை கொழுந்து பறிப்பாளரை தெரிவு செய்யும் போட்டி நானுஓயா – ரதல்ல, தேயிலை மலையில் நேற்று (01) நடைபெற்றது.

20 நிமிடங்கள் வழங்கப்பட்டு, இக்காலப் பகுதிக்குள் கூடுதல் கொழுந்து பறிப்பவர் மற்றும் தரமான கொழுந்து பறிப்பவர் வெற்றியாளராகத் தெரிவுசெய்யப்பட்டது

இதில் தலவாக்கலை – பெருந்தோட்ட நிறுவத்தின் கீழ் இயங்கும் கிரேட்வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அந்தனி இரேஷா ராஜலட்சுமி முதலிடத்தை பிடித்துள்ளார்.

அவருக்கு 6 லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா பணப்பரிசும், தங்கப்பதக்கமும் 43 இன்ச் அங்குலம் கொண்ட ஸ்மார்ட் டிவி ஒன்றும் ( inஉh ளஅயசவ வஎ) வழங்கப்பட்டது .

மேலும் ஒரு இலட்சம் ரூபாய் பணப்பரிசு மூவருக்கும் 75 ஆயிரம் ரூபாய் பணப்பரிசு மூவருக்கும் பதக்கங்களும் வழங்கப்பட்டது .

வருட வருடம் குறித்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன தேயிலை துறையின் எதிர்கால இருப்பினை தக்க வைக்கும் முகமாகவும் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தவதற்காகவும் உட்சாகப்படுத்துவதற்காகவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போட்டி நிகழ்விற்குப் பிரதம அதிதியாக ஹேலிஸ் நிறுவனத்தின் தலைவர் மொகான் பண்டித்தகே, ஹேலிஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் டாக்டர் ரொஷான் ராஜதுரை, உட்பட நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தோட்ட முகாமையாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *