மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி – 4 பேர் கைது

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் பம்பரகலை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் செயல்பட்டுவந்த விபசார விடுதி ஒன்று செவ்வாய்க்கிழமை (11) பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது. இதன்போது, அங்கு இருந்த நான்கு பெண்களும், நிர்வாகத்துடன் தொடர்புடைய இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுர்வேத ஸ்பா நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் செயற்பாடுகள் நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நுவரெலியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு, குறித்த இடத்தில் சோதனை நடத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள் 21, 25, 34, 34 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் வெளிமடை, இரத்தினபுரி, கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

தற்போது, இந்த 4 சந்தேகநபர்களும் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் தனித்தனியாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. பின்னர், அவர்கள் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *