கலிப்சோ சுற்றுலா ரயில் சேவை ஆரம்பம்
பயணிகளின் கோரிக்கைக்கமைய ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நானுஓயாவிற்கு கலிப்சோ ரயிலை இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த கலிப்சோ ரயில் தற்போது பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையில் தினமும் இயக்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
பயணிகளின் தற்போதைய கோரிக்கையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பதுளைக்கும் நானுஓயாவிற்கும் இடையில் கலிப்சோ ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே முகாமைத்துவப் பணிப்பாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்தார்.