இலங்கை மத்திய வங்கியின் சமூகம் சார் முக்கிய நிகழ்வு

இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு “திறந்த நாள் நிகழ்ச்சியை” ஏற்பாடு செய்தது.

நுவரெலியா பதுளை பிரதான வீதியோரத்தில் பொது மக்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் நடமாடும் நுவரெலியா கிரகறி வாவிக்கரையோரத்தில் அமைந்துள்ள வாகனம் நிறுத்தும் திடலில் மார்ச் 22 மற்றும் 23 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது.

இந்த திறந்த நாள் முயற்சி நிகழ்ச்சியில் சமீபத்திய டிஜிட்டல் கட்டண முறைகள் குறித்த பொது விழிப்புணர்வை மேம்படுத்துவதையும் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி டிஜிட்டல் பணம் செலுத்துவது குறித்த தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது.

மேலும் நிகழ்வில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போன்ற மின்-பண சேவை வழங்குநர்கள், அத்துடன் நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) உள்ளிட்ட மொபைல் கட்டண செயலிகள் சேவை வழங்குநர்கள் நேரடி அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர் .

குறிப்பாக EPF மொபைல் சேவைகள் – ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) சேவைகள் தொடர்பான உதவியை வழங்குதல் மற்றும் பொதுமக்கள், மத்திய வங்கியின் வெளியீடுகளை வாங்குவதற்கான ஒரு பிரத்யேக புத்தகக் கடை அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வு, தொழில் புரிவோர், மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கலந்துகொண்டு நன்மை பயக்கும் விடயங்களை பெற்றுக்கொண்டனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *