மாணவர்கள் குழுக்களுக்கிடையில் மோதல்: மூவர் காயம்
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீட மாணவர்கள் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு காயமடைந்த மூன்று மாணவர்கள் இன்று (23) பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கடந்த வருடம் (4ம் வருடம்) கல்வி கற்கும் 25 வயதுடைய கந்தளாய் அக்போபுர, கடுவெல வீதி, அதுருகிரி, பத்தேகம கொதடுவவத்த ஆகிய பகுதிகளில் வசிக்கும் 25 வயதுடைய மூன்று மாணவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்கள் இரு குழுக்களுக்கு இடையில் சனிக்கிழமை(22) இரவு பல்கலைக்கழகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், தகராறு முற்றியதையடுத்து அந்த இடத்திற்கு சென்ற தொழில்நுட்ப பீடத்தின் மூன்று மாணவர்கள் இரும்பு கம்பியால் தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.