நல்லதண்ணியில் சிறுத்தை சடலம் மீட்பு

கிஷாந்தன்

நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான தோட்டம் வாழமலை பிரிவில், தேயிலை மலையில் 22.01.2025 அன்று சுமார் நான்கு அடி நீளமான உயிரிழந்த சிறுத்தை சடலமொன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தோட்ட மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், இந்த சிறுத்தை சடலம் மீட்கப்பட்டது.

சிறுத்தை விஷ உணவு உட்கொண்டு உயிரிழந்ததா அல்லது எவரேனும் கொன்றுவிட்டார்களா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் நல்லதண்ணி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிறுத்தையின் உடலில் காயங்களும் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சிறுத்தையின் சடலத்தை நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்களத்தினர் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *