ஹோட்டல் அறையில் திடீர் தீ பரவல்

நுவரெலியா கிரேன் ஹோட்டல் வீதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் பாவித்த பொருட்களை சேமித்து வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில் பெருமளவான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (06) மாலை குறித்த அறையில் தீப்பரவல் ஏற்பட்ட போது தீயை கட்டுப்படுத்துவதற்கு நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை சில மணித்தியாலங்களுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்தது.

இவ் தீப்பரவல் சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகிறது எனினும் குறித்து அறையில் வைக்கப்பட்டிருந்த சமையல் உபகரணங்கள் , இலத்திரனியல் உபகரணங்கள், தளபாடங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் தீப்பற்றியமைக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *