நுவரெலியாவில் உறைபனி பொழிவு

நிலவும் குளிருடனான வானிலையால், நுவரெலியாவின் பல இடங்களில் இன்று சனிக்கிழமையும் (24) உறைபனி பொழிவு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் மிகக் குறைந்த வெப்பநிலை இன்று நுவரெலியாவில் பதிவாகியுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நுவரெலியாவில் 7.8 °C வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அதேநேரம், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அமைந்துள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அடர்ந்த உறைபனி காணப்படுவதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக்கும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக ஹட்டன் – நுவரெலியா, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதிகள் மற்றும் பக்கவாட்டு வீதிகளில் பரவலாக உறைபனி காணப்படுகிறது.
இதன்காரணமாக, குறித்த வீதிகளில் வாகன ஓட்டிகள் மெதுவாகவும் கவனமாகவும் வாகனங்களை செலுத்துமாறு ஹட்டன் பொலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
