வெள்ள நீரால் மரக்கறிகள் அழிவு – விவசாயிகள் கவலை
நுவரெலியா கந்தபளை பிரதேசத்தில் கடும் மழைக் காரணமாக விவசாயம் செய்யும் தாழ் நிலங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீரினால் அறுவடைக்கு தயாரான மரக்கறி அழிவடைந்து வருகின்றன.

குறிப்பாக நுவரெலியா – ஹைபோரஸ்ட் பிரதான வீதிகளிலும், புரூக்சைட், மந்தாரம் நுவர மற்றும் கந்தப்பளை போன்ற பகுதிகளில் பல இடங்களில் பாரிய கற்கள், மண்மேடுகள், மரங்கள் சரிந்து வீழ்ந்தமையால் போக்குவரத்து பாதிக்கபட்டது.

விவசாய நிலங்களில் மழை நீர் சூழ்ந்து குளம்போல் தண்ணீர் தேங்கி உள்ளதால் மரக்கறி வகைகள் அழுகி போவதற்கான ஆபத்து உள்ளதாகவும், ஒரு சில இடங்களில் பயிரிடப்பட்ட மரக்கறி வகைகள் அனைத்தும் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டதால் பாரிய நட்டத்துடன் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் கால்வாய்கள் முறையாக புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்படாததன் காரணமாக அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு இந்த விவசாய நிலங்களுக்கு அழிவு எற்பட்டு மூழ்குவதற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
