மலையகத்தில் அடைமழை
மத்திய மலைநாட்டில் கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக நிலவிய கடுமையான வறண்ட வானிலை முடிவுக்கு வரும் வகையில், பொகவந்தலாவ, ஹட்டன், டிக்கோயா மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (03) அன்று பிற்பகல் பலத்த மழை பெய்தது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்குச் செல்லும் கெசல்கமுவ ஓயா வின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.


