பதுளை – அம்பேவெல ரயில் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

பதுளை – அம்பேவெல ரயில் பாதை சீரமைக்கப்பட்டமையால் அப்பகுதிக்கான ரயில் சேவைகள் இன்று (20) முதல் ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 8.00 மணிக்கு பதுளை – அம்பேவெல விசேட ‘உடரட்ட மெனிகே’ ரயில் இயக்கப்பட்டது.
இதனடிப்படையில், இன்று முதல் மலையக ரயில் பாதையில் பதுளை – அம்பேவெல நிலையங்களுக்கு இடையில் பல ரயில்களை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்நிகழ்வில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
