கண்டியில் இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினம்
க.கிஷாந்தன், பா.திருஞானம்
இந்தியாவின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (26) சிறப்பான நிகழ்வு நடைபெற்றது.

இந்திய உதவி உயர்ஸ்தானிகர் திருமதி வீ.எஸ். சரண்யாவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மலையக இந்திய குடும்பங்கள், அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீடங்களின் பிரதிநிதிகள், அனுநாயக்க தேரர்கள், இந்து மற்றும் இஸ்லாமிய சமய தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் கண்டி தமிழ் வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, இந்திய குடியரசுத் தலைவரின் ஆசிச் செய்தியை உதவி தூதுவர் திருமதி வீ.எஸ். சரண்யா வாசித்தார். குடியரசு தினத்துக்கான நிகழ்வை முன்னிட்டு இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தின் கட்டடம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.





