உயிழந்த நிலையில் சடலம் மீட்பு

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்கு சொந்தமான மேஃபீல்ட் தோட்டத்தில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சிறுத்தையொன்று உடல் நேற்று (09) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டதாக நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுத்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும்இ வாகனம் மோதியதாலோ அல்லது யாராவது தாக்கியதாலோ இந்தக் காயம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு இறந்த புலி 3 வயதுடைய பெண் புலி எனவும் அடையாளங்காணப்பட்டுள்ளது.

அட்டன் நீதவானின் உத்தரவின் பேரில் சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பப்படும் என்று வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *