நுவரெலியாவில் 200 நிலையான விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

பூச்சிக்கொல்லிகள் அற்ற மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நல்ல விவசாய முறைகளை ஊக்குவிக்கும் வகையில், விவசாய திணைக்களத்தின் நுவரெலியா மாவட்ட அலுவலகம் மற்றும் கொரியா சர்வதேச ஒத்துழைப்பு அறக்கட்டளையின் ஐ.நா வாழ்விட திட்டத்தினால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சுமார் 400 விவசாயிகளுக்கு நடைமுறை மற்றும் கோட்பாட்டு பயிற்சி நிகழ்ச்சியும், சாதனை படைத்த விவசாயிகளுக்கான சான்றிதழ் வழங்கும் விழாவும் இன்று (28) நடைபெற்றது.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தலைமையில் நுவரெலியா மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் ரங்கன சந்திரசிறி, நுவரெலியா மேலதிக மாவட்ட செயலாளர் தினிகா கவிசேகர, நுவரெலியா மேலதிக மாவட்ட செயலாளர் ஷாலிகா மற்றும் அன்வர் கான்ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு, பயிற்சியின் போது வெற்றிகரமான முடிவுகளை அடைந்து, பயிற்சியின் போது கொடுக்கப்பட்ட அளவுகோல்களை சரியாக கடைபிடித்த விவசாயிகள், வணிக சாகுபடி, ஒருங்கிணைந்த சாகுபடி மற்றும் காய்கறிகள், பழங்கள் மற்றும் அலங்கார பூக்களின் பசுமைக்குடில் சாகுபடி உட்பட எந்தவொரு விவசாய நடவடிக்கையிலும் பாதுகாப்பான மற்றும் நிலையான விவசாய நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக மதிப்பீடு செய்யப்பட்டனர்.
இத்திட்டத்திற்கு மேலதிகமாக விவசாய உபகரண விநியோகம், வீதிகள் அமைத்தல் போன்ற பல திட்டங்களும் இவ் விவசாயிகளுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதுடன், கொரியா சர்வதேச ஒத்துழைப்பு அறக்கட்டளை இத்திட்டங்களுக்காக 246 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.