தெல்தோட்டையில் மண்சரிவு

கண்டி, தெல்தோட்டையில் நேற்று (05) இரவு முதல் மழை பெய்து வருவதால், அந் நகரில் இருந்து ஹேவாஹேட்ட நகருக்கு செல்லும் பிரதான வீதியில் நாராஹின்ன பகுதியில் நேற்று இரவும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மண்ணை அகற்றியபோதும் மீண்டும் மீண்டும் மண்சரிந்து கொண்டே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *