மின்னல் தாக்கியதில் வீடு சேதம்

ஹட்டன் நோர்வூட் பகுதியில் நேற்று (22) பிற்பகல் பெய்த இடியுடன் கூடிய மழையினால் மரமொன்றில் மின்னல் தாக்கி மரத்தின் கிளையொன்று வீடொன்றின் மீது வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நோர்வூட் வென்ச்சர் தோட்டத்தின் ஊடாக வீசிய பலத்த காற்றினால் வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.
மின்னல் தாக்கத்தினால் அருகில் உள்ள மரத்தின் கிளையொன்று திடீரென முறிந்து விழுந்து வீடு சேதமடைந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் ஒரு வீடு பலத்த சேதமடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது