நுவரெலியாவில் விபத்து – ஒருவர் படுகாயம்
நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியில் ராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புரூக்சைட் பகுதியில் லொறியொன்று தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி இன்று (20) விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராகலை பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த லொறி அதே திசையில் பயணித்த பேருந்து ஒன்றை முந்தி செல்வதற்கு முயற்சித்தபோது நுவரெலியாவிலிருந்து ராகலை நோக்கி எதிர் திசையில் பயணித்த தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தில் தனியார் பேருந்தும் லொறியும் பாரியளவு சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
