மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு
மாத்தளை – யட்டவத்த, வாலவெல பகுதியில் வனவிலங்குகளிடமிருந்து நெற்பயிர்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத மின்சார கம்பியில் சிக்கி, விலங்குகளை வேட்டையாடச் சென்ற ஒருவர் இன்று (02) உயிரிழந்துள்ளதாக யடவத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் நாவுல, ஓபல்கல பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய லலித் ரத்நாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக வயலுக்கு மின்சாரம் இணைத்த வயலின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.