டிக்கோயா வைத்தியசாலையின் குறைபாடுகள் குறித்து கலந்துரையாடல்
பாராளுமன்ற வளாகத்தில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரிகளுக்கும், சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்குமிடையிலான முக்கியமான கலந்துரையாடல் புதன்கிழமை (05) இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்தினால், கிளங்கன் வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் வளப்பற்றாக்குறைகள் குறித்து சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சந்திப்பில், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், கிளங்கன் வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரிகள் மற்றும் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அந்தவகையில், டிக்கோயா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் வளப்பற்றாக்குறைகளை குறைக்க கட்டம் கட்டமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
