நானுஓயாவிற்கு கலிப்சோ சுற்றுலா ரயில் சேவை
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ரயில்வே திணைக்களத்தால் புதிதாக வடிவமைக்கப்பட்ட கலிப்சோ ரயில், இன்று (08) காலை 8.10 மணிக்கு நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து தெமோதர ரயில் நிலையத்திற்கு தனது பயணத்தைத் ஆரம்பித்தது.
இந்த ரயில் சேவையானது ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நானுஓயாவிலிருந்து தெமோதரவுக்குப் புறப்படும், மேலும் ரயிலில் பயணிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ரயில் பாதையில் உள்ள அழகிய நீர்வீழ்ச்சிகள் மற்றும் பிற இடங்களைப் பார்த்து புகைப்படம் எடுப்பதை எளிதாக்கும் வகையில் ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒரு பெட்டி கூரை இல்லாமல் திறந்திருப்பதுடன் ரயிலில் சாப்பாட்டு அறையும் பொருத்தப்பட்டுள்ளது.
அந்த ரயிலில் நானுஓயாவிலிருந்து தெமோதரவுக்கு பயணிக்கும் ஒரு சுற்றுலாப் பயணிக்கு 10,000 ரூபா அறவிடப்படவுள்ளது.