கம்பளை– கண்டி பிரதான வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு
கம்பளை– கண்டி பிரதான வீதியின் கெலிஓயா , கரமட விகாரைக்கு அருகில் இன்று (12) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த கடைமீது மோதியுள்ளது.
அத்துடன், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவொன்றையும் மோதி தள்ளி முன்சென்று, வீடொன்றின் மதில்மீது மோதி நின்றுள்ளது.
