எல்பியன் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

அக்கரப்பத்தனை எல்பியன் தோட்டத்தினை சேர்ந்த 200 இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (02) காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இத்தோட்டத்தில் 05 தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் வேலை நிறுத்தம் செய்துள்ளது இதனை கண்டித்து அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டுமென கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை தொழிலாளர்கள் முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், பெண் தொழிலாளர்கள் மூன்று நாட்கள் தொழிலுக்கு செல்லாவிட்டால் அவர்களுக்கு வேலை நிறுத்தம் செய்தல் தொழிலாளர்கள் வாழும் குடியிருப்பினை திருத்தம் செய்தால் அதற்கு எதிரான நடவடிக்கையை முன்னெடுத்தல்.
தொழிலாளர்களை அதிக நேரம் தொழில் செய்ய வைத்தல். தேயிலை செடிகளை முறையாக பராமரிப்பு செய்யாமை முறையான சுகாதார வசதிகளை செய்து கொடுக்காமல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மக்கள் முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
