இம்முறை தமிழ் முற்போக்கு கூட்டணி அணியே வெற்றிபெறும்

க.கிஷாந்தன்

போலி வாக்குறுதிகளை வழங்கியே தேசிய மக்கள் சக்தி வாக்குகளைப் பறித்துள்ளது. எனவே, நுவரெலியா மாவட்டத்தில் இம்முறை தமிழ் முற்போக்கு கூட்டணி அணியே வெற்றிபெறும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கான முதலாவது பிரச்சார கூட்டம் கொட்டகலையில் இடம்பெற்றது.

இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கூறியவை வருமாறு,

‘ உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். தேசிய மக்கள் சக்தி பொய்யான வாக்குறுதிகளை வழங்கியே வாக்குகளைப் பறித்தனர்.

ஐஎம்;எப் விதிகள் மாற்றப்படும் என்றனர், அரிசி மாபியா நிறுத்தப்படும், இறக்குமதி செய்யப்படமாட்டாது எனவும் கூறினார். ஆனால் அது நடக்கவில்லை. மறுபுறத்தில் அபிவிருத்தி திட்டங்களும் இடம்பெறவில்லை.

மலையகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும் பகுதி இந்திய நிதியாகும்.

நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் எகிறிவருகின்றன. தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் இல்லை.

வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடரின் இறுதி நாளன்று ஜனாதிபதி நீண்டநேரம் உரையாற்றினார். ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பற்றி எதுவும் கூறவில்லை.” – என்றார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *