ஆசிரியர்களை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்ட்டன் தெபட்டன் தமிழ் வித்தியாலயத்தில் நிரந்தர அதிபர் ஒருவரை நியமிக்குமாறு குறித்த பாடசாலைக்கான ஆசிரியர்களை பெற்று தருமாறு வழியுறுத்தியும் செவ்வாய்க்கிழமை (22) அன்று காலை அப்பிரதேச பெற்றோர்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நோர்ட்டன் தெபட்டன் தமிழ் வித்தியாலயத்தில் 185 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்ற போதிலும் தரம் 01தொடக்கம் தரம் 11 வரை காணப்படுகிறது எமது பாடசாலையில் 12 ஆசிரியர்கள் பணி புரிந்து வருவதாக ஹட்டன் வலய கல்விப்பணிப்பாளர் கூறுகிறார்.

ஆனால் பெற்றோர்களாகிய நாங்கள் பாடசாலைக்குசென்று பார்த்தால் தினமும் ஐந்து ஆசிரியர்கள் மாத்திரம் சமூக தருகின்றனர்.

நிரந்தர அதிபர் மற்றும் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் சுற்றி காட்டியுள்ளனர்.

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பாக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் ஊடாக ஹட்டன் வலய கல்வி பணிமனையின் பணிப்பாளருக்கு எழுத்து மூலமான கடிதம் வழங்கியுள்ள போதிலும் எமது பாடசாலையின் பிரச்சினை தொடர்பாக ஹட்டன் வலயக்கல்வி பணிப்பாளர்கள் கண்டுகொள்ளவில்லை என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர் .

முறையான அதிபர் இல்லாமலும் குறைந்த ஆசிரியர்கள் காணப்பட்ட போதிலும் எமது பாடசாலையில் கல்வி பயிலுகின்ற மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினை எடுத்துள்ளனர்.

எனவே எமது பாடசாலையில் காணப்படும் அதிபர் பிரச்சினை மற்றும் ஆசிரியர்கள் பிரச்சினைகளுக்கு ஹட்டன் வலய கல்வி பணிமனை தீர்வை பெற்று தர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விடயம் குறித்து ஹட்டன் வலய கல்வி பணிமனையின் பணிப்பாளர் ஆர்.விஜயந்திரனை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அது பலனளிக்கவில்லை இந்த சம்பவம் தொடர்பாக மத்திய மாகாண மேலதி கல்வி பணிப்பாளர் நிகால் அபேகோனிடம் தொடர்பு கொண்டு வினவிய போது ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகிறது .

அந்த வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் அதிபர்கள் அல்லாத பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிப்பதற்காக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது அந்த வகையில் வெகு விரைவில் தெபட்டன் தமிழ் வித்தியாலயத்திற்கு மாத்திரமல்ல அதிபர்கள் இல்லாத பாடசாலைகளுக்கும் அதிபர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட உள்ளது

தெபட்டன் தமிழ் வித்தியாலயத்தில் காணப்படும் ஆசிரியர்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு செவ்வாய்க்கிழமை (22) அன்று ஹட்டன் வலய கல்வி பணிமனையில் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் நிகால் அபேகோன் குறிப்பிட்டார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *