பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

பண்டாரவளையில் உள்ள வீடொன்றில் கடந்த 03 ஆம் திகதியன்று பணம் மற்றும் தங்க நகைகளை திருடியதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

எல்ல பொலிஸாருக்குக் கிடைத்த புகாரின் அடிப்படையில், சந்தேக நபர் ரூ. 45,000 ரொக்கம் மற்றும் கிட்டத்தட்ட ரூ. 700,000 மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார்.

குறித்த வீட்டில் திருடிய பிறகு சந்தேக நபர் தப்பிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகளை பொலிஸார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர். சந்தேக நபர் பற்றிய விவரங்களை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியாததால், இதற்காக பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தேக நபரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 071- 8591524 அல்லது 057- 2228522 என்ற தொலைபேசி எண்கள் மூலம் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *