விசேட தேவையுடையோர்களுக்கு விருது வழங்கும் விழா
டெஸ்போர்ட் தோட்ட பிரிவில் விசேட தேவையுடையோர் அமைப்பின் ஏற்பாட்டில் சாதனையாளர்களை கௌரவித்து விருது வழங்கும் விழா.

நுவரெலியா மாவட்ட விசேட தேவையுடையோர் அமைப்பின் ஏற்பாட்டில் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட டெஸ்போர்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில் சாதனையாளர்களை கௌரவிக்கும் சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (15) நடைபெற்றது.
இந்நிகழ்வில்இ இலங்கை வரலாற்றில் முதல்தடவையாக விழிப்புலனற்றோர் சார்பில் பாராளுமன்றம் சென்ற சுகத் டி சில்வா முதன்மை அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்
மேலும் சிறப்பு விருந்தினர்களாகஇ நுவரெலியா மாவட்ட செயலாளகத்தின் சமூக சேவை உத்தியோகத்தர் பியந்த டி சில்வாஇ வு-குநைடன குழந்தைகள் மேம்பாட்டு அறக்கட்டளையின் நிறுவனத்தின் திட்டமிடல் உத்தியோகாத்தர் தர்மேந்தித்திரராஜஇ டெஸ்போர்ட் தமிழ் மகா வித்தியாலய முதல்வர் பி. சந்திரசேகரன் இ நானுஓயா பொலிஸ் நிலை உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

குறித்த நிகழ்வை நுவரெலியா மாவட்டத்தில் விசேட தேவையுடையோர் அமைப்பின் செயலாளர் ஆனந்தன் தலைமையில் ஒருங்கிணைத்ததுடன் டெஸ்போட் பாடசாலை மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதில் டெஸ்போர்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில் 2020 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் கல்வி கற்று சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகம் சென்றுள்ள மாணவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பதக்கங்கள் அணிவித்தும் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இறுதியில் நிகழ்வை நினைவுகூரும் பொருட்டு பாடசாலை வளாகத்தில் நீண்ட காலம் பயன் தரக்கூடிய மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.
நுவரெலியா மாவட்டத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் சிறப்பாக இயங்கி வரும் விசேட தேவையுடையோர் அமைப்பானது தொடர்ச்சியாக பொது மக்களுக்கு பயன் தரும் பல காத்திரமான பணிகளையும்இ சேவைகளையும் முன்னெடுத்து வருகின்றமை மிகவும் பாராட்டத்தக்கதாகும்அத்துடன் இவ்வமைப்பு எந்த அரசியல் சிந்தனையையும் உள்வாங்காமல் சமூகத்தின் தனித்துவத்தையும் இலக்காகக் கொண்டு தொடராகப் பயணித்துக் கொண்டிருக்கிறது.