றம்பொடயில் மீட்கப்பட்ட மனித கால்

சீரற்ற காலநிலை காரணமாக கொத்மலை -றம்பொடயில் ஏற்பட்ட கடுமையாக மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஒரு பெண்ணின் கால் என சந்தேகிக்கப்படும் ஒரு பகுதி இன்று (17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி இந்திக லலித் தெரிவித்தார்.

மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் கால் ஒன்று மண்ணுக்குள் புதையுண்டு இருப்பதாக அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் குறித்த கால் பகுதி மீட்கப்பட்டதாகவும், அந்த கால் பகுதியில் மரபணு (DNA) பரிசோதனைக்கு அனுப்பப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தார்.

கொத்மலை – றம்பொடயில் ஏற்பட்ட கடுமையான மண்சரிவில் சிக்கிய 27 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் 21 பேரை இதுவரை காணவில்லை எனவும் மண்சரிவு ஏற்பட்ட நேரத்தில் வீதியில் பயணித்த வேன் மற்றும் லொறி ஆகியனவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *