“எமது மலையகம்” அமைப்பின் நடமாடும் தண்ணீர் பந்தல்
தலவாக்கலை கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை (13) பால்குட பவணி மற்றும் காவடி நிகழ்வுகள் மிகுந்த பக்தி பரவசத்துடன் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் பக்த அடியார்கள் பெருந்திரளாக கலந்துகொண்டதுடன், “எமது மலையகம்” அமைப்பின் ஏற்பாட்டில், பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு தலவாக்கலை நகர மத்தியில் நடமாடும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு, அனைவருக்கும் மோர் தானம் வழங்கப்பட்டது.
இனி வரும் காலங்களில் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய சேவைகளை முன்னெடுக்க இலக்குடன் இவ் அமைப்பு செயற்பட்டு வருகின்றது.