மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் படுகாயம்
க.கிஷாந்தன்
ஹட்டனில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியில் பயணித்த ஒருவரை மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவரும் குறித்த நபரும் காயமடைந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து புதன்கிழமை (19) அட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தேயிலைத் தோட்டத்தில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த குறித்த நபர், கவனக்குறைவாக பிரதான வீதியில் கடக்க முயன்றபோது, மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியுள்ளது.
விபத்து குறித்து ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.