திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி, இன்று (23) திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளாதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் ஹட்டன் ஸ்டெதன் தோட்ட பகுதியிலயே இவ்வாறு முச்சக்கர வண்டி தீப்பிடித்து எரிந்தது.

ஹட்டனில் உள்ள ஒரு பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் இருந்து தனது முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்ததாகவும், மேலும் இரண்டு பயணிகளுடன் கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது முச்சக்கர வண்டியின் பின்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் தெரிவித்தார்.

பிரதான வீதியில் பயணித்த வாகன சாரதிகளும், பிரதேச மக்களும் தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *