நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்
நுவரெலியாவில் 2025ஆம் ஆண்டுக்கான வசந்த கால கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிலையில் நுவரெலியாவில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணமாக உள்ளனர்.
நுவரெலியா மாநகரசபையின் ஏற்பாட்டில் இம்மாதம் 30ஆம் திகதி வரை தினந்தோறும் கலை கலாச்சார விளையாட்டு போட்டிகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் நுவரெலியாவிற்கு வருகை தருவதால் வாகன தரிப்பிடங்களிலும் நுவரெலியா – பதுளை, நுவரெலியா – கண்டி நுவரெலியா – ஹட்டன் போன்ற பிரதான வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பிரதான நுழைவாயில் சோதனை சாவடி மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் கூடுதலான எண்ணிக்கையில் பொலிஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.