மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த தனியார் பஸ் மீது மரம் விழுந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் நியூ வேலி சுற்றுவட்ட பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது மரம் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மரம் வெட்டப்படும் வரை நேற்று (30) மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை வீதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

மரம் முறிந்த நேரத்தில் பஸ்ஸில் யாரும் இல்லை என்றும், மரம் முறிந்ததால் பஸ் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *