டீசலுடன் மண்ணெண்ணெய் கலப்பு : பாரவூர்தி சாரதி பிணையில் விடுவிப்பு
வலப்பனையிலிருந்து ஹட்டனுக்கு மணல் கொண்டு சென்ற ஒரு பாரவூர்தி சாரதி, டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து வாகனம் செலுத்தியதாக இன்று (16) கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
லிந்துலை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி பாலித நந்தசிறி தெரிவித்ததாவது, சம்பவம் தொடர்பான எரிபொருள் மாதிரிகள் பெற்றோலியக் கூட்டுத்தாபன ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும், அறிக்கையின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இச்சம்பவம், சில பாரவூர்திகள் டீசலுடன் மண்ணெண்ணெய் கலப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, லிந்துலை பொலிஸாரின் அதிரடிச் சுற்றிவளைப்பில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
