சிறுவர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை: இரண்டு குழந்தைகள் வைத்தியசாலையில்…
பண்டாரவளை சிறுவர் இல்லத்தில் பராமரிப்பில் இருந்த இரண்டு குழந்தைகள் உணவு சாப்பிட்ட பிறகு ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் வியாழக்கிழமை(05) அனுமதிக்கப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் இரண்டரை வயது மற்றும் ஐந்து வயதுடையவர்கள், அவர்கள் சிறுவர் இல்லத்தில் இருந்தனர். பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.