காட்மோர் நீர்வீழ்ச்சியில் சடலம் மீட்பு
மவுசாகலை நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் காட்மோர் நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் உள்ள நீர்த்தேக்கத்தில் இன்று (24) காலை அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மவுசாகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மவுசாகலை நீர்த்தேக்கத்தில் நன்னீர் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு குழு முதலில் உடலைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளது.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மஸ்கெலியா பொலிஸார், சடலம் தொடர்பாக நீதவான் விசாரணையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளனர்.