கண்டியில் காய்கறிகளின் விலை எகிறியது

கண்டியில் காய்கறிகளின் விலை மிக உயர்ந்துள்ளதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கண்டி மற்றும் கண்டியை அண்மித்துள்ள அக்குறணை, மடவளை, வத்துகாமம் போன்ற பல இடங்களில் காய்கறிகளின் விலை மிக அதிகரித்துள்ளன.

அண்மை காலத்தில் மிக மலிவாகக் கிடைத்த புடலங்காய் ஒரு கிலோ 500 ரூபாவிலும் அதிகமாக விற்பனையாகிறது.

அதேபோல் போஞ்சி போன்றவை கிலோ 1000 ரூபா வரை விற்பனையாகிறது. கத்தரிக்காய் 700 ரூபா வரையிலும், அதே நேரம் தக்காளி காய் ஒன்று 100 ரூபா அளவில் விற்பனையாகிறது.

அதேபோல் உள்ளூரில் விளையும் பலாக்காய், வடுக்காய் என்பவற்றிலும் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

செவ்விளநீர் ஒன்று 180 முதல 200 ரூபா வரை விற்கப்படுகிறது. முன்னர் 60 ரூபாவிற்கு விற்கப்பட்ட கொஹில கீரை ஒரு கட்டு 100 ரூபாவரையும் விற்பனையாகிறது.

100 ரூபாவிலும் குறைவாக இருந்த மரவள்ளிக்கிழங்கு தற்போது கிலோ 200 ரூபாவாக உள்ளது. 40 ரூபாவிற்கு விற்கப்பட்ட கங்குங்கீரை கட்டு தற்போது 70 முதல் 80 வரை விற்பனையாகிறது. 100 ரூபாவிலும் குறைவாக இருந்த பயிற்றங்காய் ஒரு கிலா 350 ரூபா வரை விற்கப்படுகிறது. இதனால் நுகர்வோர் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *