வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஜீவன்

க.கிஷாந்தன்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்றைய தினம்(20) நுவரெலியா மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான (2025) வேட்புமனு தாக்கல் செய்தார்

மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தில், 2025 உள்ளூராட்சி மன்றம் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றது. வளப்பனை பிரதேச சபை மாத்திரம் நாட்காளி சின்னத்தில் போட்டியிடுகின்றது.

மேலும் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா மாநகரசபை, ஹட்டன்-டிக்கோயா நகரசபை, தலவாக்கலை-லிந்துள்ள நகரசபை மற்றும் மஸ்கெலியா, நோர்வூட், கொட்டகலை, அக்கரபத்தனை, அம்பகமுவ, கொத்மலை, வளப்பனை, ஹங்குராகெத்த பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்றைய தினம்(20) நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தேர்தல் கடைமைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக காரியாலயத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், நிதிச் செயலாளரும் தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், இ.தொ.கா உயர்மட்ட உயர்மட்ட உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *