மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு
பொக்காவல, ரம்புக்வெல பிரதேசத்தில் நேற்று (30) இரவு மின்சாரம் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மின்சார ஹீட்டர் ஒன்றிலிருந்தே இவ்வாறு மின்சாரம் பாய்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவர் கண்டி, ரம்புக்வெல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான பெண் ஆவார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொக்காவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
