44 வாகனங்கள் தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்கம்

மோட்டார் போக்குவரத்துத் துறையின் மோட்டார் பரிசோதகர் எம்.எஸ்.எல். சந்தன பண்டார, நேற்று (19) ஹட்டன்-கண்டி பிரதான சாலையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கும் தனியார் பேருந்துகள் உட்பட ஏனைய வாகனங்கள் அடங்களாக 44 வாகனங்களை தற்காலிகமாக சேவையில் ஈடுபடுவதற்கு நீக்கம் செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் ஆய்வாளர் ஜாலிய பண்டாரவின் வேண்டுகோளின் பேரில் கொழுப்பு நாரஹேன்பிட்டியில் உள்ள தலைமை மோட்டார் போக்குவரத்துத் துறையின் புகை பரிசோதனை ஆய்வுப் பிரிவின் அதிகாரிகளுடன் இணைந்து வருகை தந்த மோட்டார் ஆய்வாளர் எம்.எஸ்.எல். சந்தன பண்டார குழுவினர் கினிகத்தேனை பொலிஸார், மற்றும் போக்குவரத்துப் பிரிவின் பொலிஸாரின் உதவியுடன் கினிகத்தேனை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் மையங்களில் பயணித்த 115 வாகனங்களை ஆய்வு செய்துள்ளனர் .

தரமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து சேவையைப் பராமரித்தல் மற்றும் வீதி விபத்துகளைக் குறைத்தல் என்ற நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அதிக புகை மாசு வெளியேற்றத்தைக் கொண்ட வாகனங்கள், இயக்குவதற்கு தகுதியற்ற குறைபாடுகளைக் கொண்ட வாகனங்கள் மற்றும் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பேருந்துகளை அகற்றுமாறும் பொது போக்குவரத்தின் போது வாகனங்களில் விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை அகற்றவும் சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் தற்காலிகமாக வீதிகளில் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்ட வாகனங்களில் 15 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளும் தனியார் பேருந்துகள் அடங்குகின்றது.

தற்காலிகமாக ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்ட வாகனங்களின் வருடாந்திர வருவாய் உரிமம் மோட்டார் வாகன ஆய்வாளரின் காவலில் எடுக்கப்பட்டுள்ளது, மேலும் வாகனங்கள் பழுதுபார்க்கப்பட்டு ஜூன் 30 அன்று வாகன ஆய்வு நடத்தப்பட்ட அதே இடத்திற்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது அத்துடன் தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *