ஹட்டன் நகரில் நடைபாதை வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வணிக நடவடிக்கைகளுக்காக 146 நிலங்களை குத்தகைக்கு விட்டதன் மூலம் அட்டன்- டிக்கோயா நகர சபை ரூபாய் 3.6 மில்லியனுக்கும் அதிகமாக வருமானம் ஈட்டியுள்ளது.
இதேவேளை ஹட்டன் நகரில் தற்போது நடைபாதை வர்த்தக நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஸ்டார் சதுக்கம் மற்றும் சக்தி மண்டபத்திற்கு அருகிலுள்ள நியமிக்கப்பட்ட பகுதிகள் விதிமுறைகளின் கீழ் வர்த்தக நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.