காதலுக்கு எதிர்ப்பு : தாய் மீது தீமூட்டு
பெண்ணொருவர் அவரது 13 வயது மகளினால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படும் நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய 13 வயது சிறுமி தற்போது நன்னடத்தையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி 18 வயது இளைஞனுடன் காதல் உறவில் இருந்தநிலையில் அவரது தாயார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 04ஆம் திகதி இரவு தாய் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் தாயின் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
