மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து…தாயும் உயிரிழப்பு
உடுதும்பர, தம்பகஹபிட்டி, ஹபுடந்தவல பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர், தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் விஷம் குடித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லுகேமியாவால் பாதிக்கப்பட்ட 34 வயதுடைய அவரது கணவர் இறந்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் இத் துயரச் சம்பவம் நடந்துள்ளது.
குறித்த தம்பதியரின் 12,10 மற்றும் 5 வயதுடைய மூன்று மகன்களும் லுகேமியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விஷம் கொடுக்கப்பட்ட மூன்று குழந்தைகளும் தற்போது உடுதும்பர பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிள்ளைகளின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண், மனநல பிரச்சினை தொடர்பில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.